Home இலங்கை தற்போது புதிய சில பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர்

தற்போது புதிய சில பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர்

by Jey

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத் தடை விதித்து வருகின்றது.

கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எதிர்க்கட்சிகளே வலியுறுத்தின. ஆனால், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் சபையில் இருக்கவில்லை.

இதன்மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகின்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு அவசியம். தற்போது புதிய சில பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர்.

related posts