Home இந்தியா நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் வலிமையுடன் உருவாகிற ரெயில்வே பாலம்

நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் வலிமையுடன் உருவாகிற ரெயில்வே பாலம்

by Jey

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைப்பதற்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை 300 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. எனினும், அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தின் ஒரு பகுதியில் இந்த சாலை மூடப்படும்.

இந்நிலையில், காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரெயில் இணைப்பை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, ஜீனப் ஆற்றின் மேலே ரெயில்வே பாலம் கட்டுவது என முடிவானது.

1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச்சு மற்றும் நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் வலிமையுடன் உருவாகிறது.

இதனால், கத்ரா மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையேயான தொலைவை கடக்க இதுவரை 12 மணிநேரம் எடுத்து கொள்ளும் சூழலில், ரெயில்வே பால உதவியால் அது பாதியாக குறையும்.

related posts