Home இந்தியா உள்நாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும்

உள்நாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும்

by Jey

கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 30-ந்தேதி மொத்தம் 2,978 உள்நாட்டு விமான பயணங்களில் 4,56,082 பேர் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்திற்கு முந்தையை தினசரி விமான பயணிகளின் அளவை இது தாண்டியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 30-ந்தேதி வெளிநாட்டு விமான

பயணங்களையும் சேர்த்து மொத்தம் 9,13,336 பேர் பயணம் செய்துள்ளனர். விரைவில் தினசரி உள்நாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

related posts