கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அபிலாஷைகளை முறியடிக்கும் பொது மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டம் நேற்றைய தினம் (01) நடைபெற்றது.