கனடாவில் அரச ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை தொழிற்சங்கம் அரசாங்கதுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பிரதான அரச தொழிற்சங்கம் நாடு தழுவிய அடிப்படையில் போராட்டம் முன்னெடுத்தது.
சுமார் 120000 பணியாளர்கள் இவ்வாறு தற்காலிக அடிப்படையில் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட இணங்கியுள்ளனர்.
சம்பளம் 11.5 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாகவும், இது நான்கு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திறைசேரி சபை தெரிவித்துள்ளது.
சம்பளங்கள் 13.5 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டுமென தொழிற்சங்கம் கோரியிருந்தது.
12 நாட்களாக தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
previous post