பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்யா – உக்ரைன் போரில் வெற்றிபெற ரஷ்ய துருப்புக்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த விடயம் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரெம்ளின் பாதுகாப்பு மந்திரி கர்னல்-ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் பதவி விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மிஜின்ட்சேவின் பதவி நீக்கம் உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை, என்றாலும், எதிர்காலம் பற்றிய ஊகங்கள் “ரஷ்யாவின் தளவாட சிக்கல்கள் எவ்வாறு உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது” பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது பாதுகாப்புத் துறையை அணிதிரட்டுவதற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது,
ஆனால் அது “இன்னும் போர்க்கால கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறி வருகிறது” என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.