Home இந்தியா பலத்த கடல் சீற்றத்தால் 20 அடி தூரத்துக்கு கடல் அலைகள்

பலத்த கடல் சீற்றத்தால் 20 அடி தூரத்துக்கு கடல் அலைகள்

by Jey

செங்கல்பட்டு மாவட்டத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது, மாமல்லபுரம்.

இங்குள்ள கடற்கரைப்பகுதி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை போன்று பரந்து விரிந்து காணப்படுகிறது.

இங்கு மீனவர் குடியிருப்புப்பகுதியில் உள்ள விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் தங்கும் வெளிநாட்டு, உள்நாட்டுப்பயணிகள் கடற்கரை மணல் பரப்பில் பொழுதை போக்குவர்.

அவர்கள் கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு. மாமல்லபுரத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.

பலத்த கடல் சீற்றத்தால் கடல் அலைகள் 20 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்தது.

அதனால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கரைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அந்தரத்தில் தொங்கியது.

நேற்றைய கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் கடற்கரைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் யாரும் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

குறிப்பாக கடற்கரை கோயிலின் வடக்குப்பக்க கரைப்பகுதியில் உள்ள மகிஷாசூரமர்த்தினி குடை வரை கடல் நீர் முன்னோக்கி வந்துள்ளது.

 

related posts