தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் புட்டூர் தொகுதிக்கான வேட்பாளராக அஷோக் குமார் ராய் போட்டியிடுகிறார்.
இவரது சகோதரர் சுப்ரமணிய ராய். இந்நிலையில், மைசூரு மற்றும் பெங்களூருவில் உள்ள சுப்ரமணிய ராயின் வீட்டில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.
இதில், அவரது வீட்டின் முகப்பு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, தொங்கி கொண்டிருந்த ரூ.1 கோடியை பறிமுதல் செய்து உள்ளனர்.
அதிகாரிகளின் இந்த சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் பற்றிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.