கியூபெக்கில் பாரியளவு வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும மழை காரணமாகவும், பனிப்பாறை உருகுவதன் காரணமாகவும் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக முக்கியமான உட்கட்டுமான வசதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேவை ஏற்பட்டால் உதவிகளை வழங்க தயார் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.