உக்ரைன் போரில் ஈடுபட்ட இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தன்னார்வ அடிப்படையில் இந்த இரண்டு பேரும் உக்ரைன் போரில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோ மற்றும் அல்பர்ட்டாவைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஸ்ய படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் இந்த இரண்டு பேரும் கொல்லபபட்டுள்ளனர்.
21 வயதான கோலே ஸெலென்கோ மற்றும் 27 வயதான கயில் போர்டர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் பஹ்மூட் நகரில் போரில் ஈடுபட்டிருந்த இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.