16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது
தொடர்ந்து 131 ரன்கள் இலக்கோடு குஜராத் அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.
கடைசி 12 பந்துகளில் குஜராத் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நோர்கியா பந்துவீச்சில் ராகுல் தெவாட்டியா ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார்.
இதனால் கடைசி ஒவரில் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து தெவாட்டியா விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.