ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகளின் படங்களை வெளியிட்டு பல்வேறு நபர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்கு பேஸ்புக் பக்கத்தை நடத்துபவர்கள் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
சிறுமிகளின் மீது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர்களின் படங்களைப் பயன்படுத்தும் பேஸ்புக் பக்கங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த சிறுமிகளின் புகைப்படங்கள் அவர்களின் பெற்றோரின் பேஸ்புக் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த பக்கத்தில் உறுப்பினராகிவிட்டவர்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்வதன் மூலம் தொடர்புடைய பக்கம் பராமரிக்கப்படுகிறது.
தற்போது சம்பந்தப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் நான்காயிரத்து 600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது தொடர்பான பேஸ்புக் பக்கம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் தகவல் கிடைத்து வருவதாகவும், அந்தத் தகவலுக்கு அமைய எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.