கியூபெக்கில் நீண்ட காலம அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் கியூபெக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இரவு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தில் கொவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளதாகவும், ஒன்று கூடல்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.