ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன்மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.
அதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதன் ஒருபகுதியாக மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இதனால் அந்த நாட்டின் பொதுமக்களே ரஷியா மீதான இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.