உக்ரைனின் கிராமடோர்ஸ்க் தொழிற்சாலையை ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்கியதாக டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கனரக உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தொழிற்சாலை மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் தொழிற்சாலையின் நிர்வாக கட்டடம் இடிந்து விழுந்தது.
எனினும் இதன்போது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என டொனெட்ஸ்க் ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
அதேசமயம் உக்ரைனின் பாவ்லோஹ்ராட் மற்றும் செவாஸ்டோபோலில் உள்ள ரசாயன ஆலைகள் தாக்குதலில் சேதமடைந்திருக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.