Home விளையாட்டு வீராங்கனை ஒசாகாவின் வருட வருமானம் ரூ. 400 கோடி!

வீராங்கனை ஒசாகாவின் வருட வருமானம் ரூ. 400 கோடி!

by admin
ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகாவின் 2020-21 வருட வருமானம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
போர்ப்ஸ் பத்திரிகை கடந்த வருடம் வெளியிட்ட தகவலின்படி, 2019-2020 வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டினார் ஒசாகா. இதன்மூலம் 2019-ல் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளினார். 1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தினார் ஒசாகா. அதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா கடந்த வருடம் தாண்டினார்.
இந்நிலையில் 23 வயது ஒசாகாவின் 2020-21 வருடத்தின் வருமானம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளையாட்டு வணிகப் பத்திரிகையான ஸ்போர்டிகோ வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 400 கோடி (55.2 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா. இதில் 37.68 கோடி (5.2 மில்லியன் டாலர்), டென்னிஸ் போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகையாகக் கிடைத்துள்ளது. இதர வருமானம் விளம்பரங்கள் வழியாகக் கிடைத்துள்ளன. இதனால் அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனை என்கிற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, 2020 யு.எஸ். ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.

related posts