கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
காட்டுத் தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு இவ்வாறு நிதி ரீதியான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாண அரசாங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த பகுதிகளில் களவுச் சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயிரக் கணக்கான மக்கள் காட்டுத் தீ காரணமாக இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.