Home சினிமா மனோ பாலாவின் மனைவி செய்துள்ள செயல்

மனோ பாலாவின் மனைவி செய்துள்ள செயல்

by Jey

மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால், அவர்களின் உடைகள் மற்றும் உடைமைகளை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.

கணவர் இறந்த ஒரே வாரத்தில் குடும்ப பாரம்பரியத்தை தூக்கி எறிந்து, மனோ பாலாவின் மனைவி உஷா செய்துள்ள செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆனால், அப்படி செய்வதை விரும்பாத மனோபாலாவின் மனைவி உஷா, தன்னுடைய கணவரின் உடைமைகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துள்ளார்.

மேலும் கணவரின் நினைவாக ஒரே ஒரு கை கடிகாரத்திரனை மட்டுமே தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவரது செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

இதேவேளை, நடிகர் மனோபால இறுதியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்திருந்த நிலையில், மனோ பாலாவின் இறப்பும் மிகப் பெரிய இழப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts