Home உலகம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என உறுதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என உறுதி

by Jey

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், விசாரணையின் போது பங்கேற்காத டொனால்ட் டிரம்ப், கரோலை தான் பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை எனவும் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வழக்கு கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஈ ஜெலான் கெரோல் என்பவரால் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையிலேயே தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளிக்கப்படவிருக்கும் 3 மில்லியன் டொலர் இழப்பீடு தொகையில் 2.7 மில்லியன் டொலர் இழப்பீடாகவும் 280,000 டொலர் தண்டனை செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், டொனால்ட் டிரம்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்பதை ஏற்க நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் மறுத்துள்ளது.

மேலும், இந்த தீர்ப்பானது அவமானம் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நியுயோர்க்கில் உள்ள ஆடை நிறுவனம் ஒன்றில் வைத்து இவர் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டதாகவும், ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

related posts