Home இந்தியா பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்திய பிரதமர்

பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்திய பிரதமர்

by Jey

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வந்தபோது, ராணுவத்தால் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கானின் கைது, அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதேசமயம் இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கைக்கு “தேசிய கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதன் காரணமாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்” என பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரானா சனானுல்லா விளக்கமளித்தார்

இந்த் நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் எனக் கூறியிருப்பதும், அவருக்கு டெல்லி போலீசின் பதிலும் பலரைத் திடுக்கிட வைத்திருக்கிறது.

முன்னதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி (Sehar Shinwari) என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “டெல்லி போலீசாரின் ஆன்லைன் முகவரி யாருக்காவது தெரியுமா… எனது நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்திய பிரதமர், இந்திய உளவு அமைப்பின் (RAW) மீது நான் புகாரளிக்க வேண்டும்.

related posts