Home இந்தியா பாதயாத்திரை குழுவினர் மீது பயங்கரமாக மோதிய பஸ்

பாதயாத்திரை குழுவினர் மீது பயங்கரமாக மோதிய பஸ்

by Jey

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அண்டபட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை 31 பேர் குழுவாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திண்டிவனத்தில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டனர்.

அப்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அரசு பஸ் அதிவேகமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த பாதயாத்திரை குழுவினர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சீதாராமன் (வயது 20), நாராயணன் (45) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

 

 

 

 

related posts