அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடுத்த பருவகாலத்தில் சவூதி அரேபியாவின் கழகம் ஒன்றுக்கு மகிப் “பெரிய” ஒப்பந்தத்தின் கீழ் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“மெஸ்ஸி உடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும். அவர் அடுத்த பருவகாலத்தில் சவூதி அரேபியாவில் விளையாடுவார், ”என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உடன்படிக்கை மிகப் பெரியது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெஸ்ஸியின் தற்போதைய கழகமாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் (PSG) ஜூன் 30 வரை ஒப்பந்தத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், “தமது கழகத்துடனான ஒப்பந்தத்தை மெஸ்ஸி புதுப்பிக்க விரும்பியிருந்தால், முன்பே செய்யப்பட்டிருக்கும்” என பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
35 வயதான லியோனல் மெஸ்ஸி , கடந்த வாரம் கத்தாருக்கு சொந்தமான PSG ஆல் சவுதிக்கு அங்கீகரிக்கப்படாத பயணம் மேற்கொண்டமைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மெஸ்ஸியின் போட்டியாளராக பார்க்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜனவரி மாதம் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் சவூதி புரோ லீக் கழகமான அல் நாசருடன் இணைந்துகொண்டார்.
ஜூன் 2025 க்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் மொத்தம் 400 மில்லியன் யூரோக்களுக்கு ($439 மில்லியன்) அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஃபோர்ப்ஸின் படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக ரொனால்டோவை மாற்றியுள்ளது.