Home கனடா அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய போவதில்லை

அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய போவதில்லை

by Jey

புற சக்திகளினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய போவதில்லை என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர முரண்பாட்டின் நிலைமைகள் தொடர்பில் மறைமுகமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் கனடாவின் உள்விகாரங்களில் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சீன ராஜதந்திரி ஒருவரை கனடா நாடு கடத்த தீர்மானித்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் சீன அரசாங்கம் கனடிய ராஜதந்திரி ஒருவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துவதாக அறிவித்திருந்தது.

எவ்வாறு எனும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

எனவே அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

related posts