இன்றைய தினம் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.
அதன்படி குறித்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் (11.05.2023) முதல் எதிர்வரும் (13.05.2023) ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பகிர்வு, வடக்கு அபிவிருத்தி, வடக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடமாகாணத்தின் சகல தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்புவிடுத்திருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இச்சந்திப்புக்களில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் நேற்று முன்தினம் (9.05.2023) ஜனாதிபதிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சந்திப்புக்கு வடக்கு -கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன