இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.
அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.