கனடியர்கள் ஆன்லைன் வழியாக கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக காரியாலங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடிய புதிய கடவுச்சீட்டு வடிவமைப்பில் இயற்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இயற்கை இடங்கள் மற்றும் வன வாழ்க்கை என்பனவற்றுக்கு கூடுதல் முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை, வரலாற்று சின்னங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறைவடைந்துள்ளது.
குடும்பங்கள், சிறுவர்ளக் மற்றம் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரீனா கோல்ட் மற்றும் ஏதிலிகள் மற்றும் குடிவரவு அமைச்சர் சியேன் ப்ரேசர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட கலந்தாலோசனைகளின் பின்னர் வடிவமைப்பினை மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இயற்கையை, கொண்டாடும் வகையில் இந்த கடவுச்சீட்டின் பக்கங்கள் வடிவமைக்கப்படுவதாக அமைச்சர் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.