இந்தியாவில் சிறார்களை குறிவைத்து கடத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து பின் கொலை செய்து விடுகின்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேரியுள்ளது.
தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு 10 ரூபாய் நோட்டு மற்றும் சாக்லெட்டுகள் கொடுத்து ஏமாற்றி கடத்தி செல்வார். பின்னர் தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்வார்.
பின்னர் அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பிணத்தை எங்காவது கண்காணாத இடத்தில் வீசிவிட்டு சென்றுவிடுவார்.
ரவீந்தரகுமாரிடம் இருந்து தப்பிய ஒரு சிறுமி கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை அவரை தேட தொடங்கியது.
2008ல் இருந்து 30 சிறுமிகளை கொன்ற அவர் கடந்த 2015-ம் ஆண்டு காவல்துறையிடம் சிக்கினார்.
ரவீந்திரகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அவர் குற்றவாளி என்பதும் உறுதியாகியுள்ள நிலையில் இரக்கமில்லாத இந்த கொடூரனுக்கு உச்சக்கட்ட தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பலரும் கொதிப்புடன் தெரிவித்துள்ளனர்.