இந்திய வானிலை ஆய்வு மையம் 11-ந் தேதி (நேற்று) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இதற்கு ‘மோக்கா’ என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியை கடந்து, 13-ந் தேதியன்று சற்று வலுவிழந்து, 14-ந் தேதியன்று மணிக்கு 120 முதல் 145 கி.மீ. வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது.
இந்த நிலையில், மோக்கா புயல் அதிவேகத்தில் நகருகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த புயலின் வேகம், கடந்த 6 மணி நேரத்தில் 13 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது