Home சினிமா முன்னணி நடன இயக்குனர் ஷெரீப்பின் இந்த முயற்சி

முன்னணி நடன இயக்குனர் ஷெரீப்பின் இந்த முயற்சி

by Jey

முன்னணி நடன இயக்குனர் ஷெரீஃப் தொடங்கிய நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்துள்ளார்.

ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீப் இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கியதாக நடன இயக்குனர் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி நடன இயக்குனர் ஷெரீப்பின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

related posts