சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவப்பிரிவுக்கும் இடையேயான மோதலில் பாடகி கார்டூட் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சூடானில் இரு பிரிவினருக்குமான மோதலில் சிக்கிக்கொண்டுள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே 37 வயதான பாடகி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கி சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் பிரிவுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சமீப நாட்களாக துணை ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்ட al-Hashmab பகுதியில் பாடகி கார்டூட் வசித்து வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
பாடகி கார்டூட் மரணமடைந்ததை அவரது உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூடானில் சண்டை துவங்கிய நாட்களில் இருந்தே பாடகி கார்டூட் காணொளிகளை பதிவு செய்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.
மட்டுமின்றி போருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தும் வந்துள்ளார். சூடானில் ஏற்பட்டுள்ள இந்த சண்டையில் இதுவரை 600க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 4,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும், உணவு தண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பற்றாக்குறை காரணமாக 80 சதவீத மருத்துவமனைகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.