முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் இன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“கஞ்சி” ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று. உண்ண உணவின்றி உறங்க குடில் இன்று இரத்த வாசத்தை சுவாசித்துக் கொண்டு திரிந்த எமக்கு உண்பதற்காக இருந்த ஒரே ஒரு உணவு கஞ்சி தான்.
லட்சக்கணக்கான மக்களின் உயிர்காத்த இந்த கஞ்சியை முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயருடன் அந்த மாபெரும் அவலத்தின் நினைவை வருடாந்தம் உயிர்ப்பிக்கும் வகையில், கஞ்சி வழங்கும் நிகழ்வை வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வீதியில் செல்வோருக்கு கஞ்சினை வழங்கும் போது, ஒருவர் கஞ்சியில் எச்சில் துப்பிவிட்டு சென்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனால், ஏனைய சமூக மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டிய மனித நேயம் மரணித்து போய்விட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.