சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் சென்னை அணி கேகேஆர் அணியிடம் தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு மைதானம் முழுக்க வலம் வந்து தோனியும், சென்னை அணி வீரர்களும் நன்றி தெரிவித்தனர்
அப்போது திடீரென ரசிகர்கள் போல வந்த சுனில் கவாஸ்கர், தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராப் போட, இருவரும் கட்டிபிடித்து அன்பை வெளிப்படுத்தினர்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொளிகள் இணைத்தில் வைரலாகி வருகின்றது.