நடிகை நயன்தாரா நேற்று தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
சர்வதேச அன்னையர் தினமான நேற்று, தன் காதல் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து தன் அன்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி நயன்தாரா, தன் குழந்தைகளை முதன்முதலில் கையில் ஏந்தியபோது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த பதிவில் உலகின் சிறந்த அன்னைக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.