ஜனாதிபதியை தெரிவு செய்து, பெரும்பான்மை பலத்தையும் அவருக்கு பெற்றுக்கொடுத்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ச எப்போதும் தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரவில்லை. இவை புனையப்பட்ட செய்திகள். தற்போது பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கின்றார்.
நாங்கள் தெரிவு அமைந்த அரசாங்கம், நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி நன்றாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.
எமக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை, பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களின் பொருளாதார பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தேவையே இருக்கின்றது.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து அரசாங்கத்தை வலுப்படுத்துமாறு நாங்கள் கூறியுள்ளோம்.
அப்படி செய்ய வேண்டும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.