அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்த விபத்தில் இந்திய கணனி தொழிற்நுட்ப வல்லுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.32 வயதான மாரியப்பன் சுப்ரமணியன் என்ற இந்தியரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி வீதியை கடக்கும் சிகப்பு சமிக்ஞையையும் மீறி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்த மாரியப்பன் அமெரிக்காவில் HCL நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்துள்ளார்.திருமணமான அவருக்கு நான்கு வயதில் மகன் இருக்கின்றார்.அண்மையிலேயே அவர் புளோரிடாவில் இருந்து தாம்பரத்திற்கு வந்துச் சென்றார்.
மரியப்பனின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அவரது நண்பர்கள் மற்றும் தொழில் சகாக்கள் நிதித்திரட்டி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்