அமெரிக்காவில் மூளை கட்டி பாதிப்பு காரணமாக தலைமுடியை இழந்த தாயாருக்கு மகன் தனது தலைமுடி மூலம் ’விக்’ தயாரித்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனாவை சேர்ந்த மிலானி – மேட் ஷஹா ஆகியோர் தாய் – மகன் ஆவார்கள்.
மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட மிலானி அதற்கான கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகு தனது தலைமுடியை இழந்தார்.
இதையடுத்து அவர் மகன் மேட், இரண்டரை வருடங்கள் தனது தலைமுடியை நீளமாக வளர்த்தார்.
பின்னர் $2,000 கொடுத்து தனது தாயாருக்கு விக் தயாரித்து கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் மேட்டின் இந்த செயலுக்கு மிலானி ஒப்பு கொள்ளவில்லை.
ஆனால், விடாப்பிடியாக மேட் 12 அங்குல முடியை வளர்த்துள்ளார்.