சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஷம்பூ பக்கெட்டுகள் , ஷம்பூ போத்தல்கள், கடல் அட்டைகள் உள்ளிட்ட சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் கல்பிட்டி ஆனவாசல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக கல்பிட்டி விஜய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றபட்ட பொருட்களுள் 33,600 ஷம்பூ பக்கெட்கள் ,193 ஷம்பூ அடங்கிய போத்தல்கள் மற்றும் 193 கிலோ கடல் அட்டைகள் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்களுடன் இரு சந்தேகநபர்களும் கல்பிட்டி சின்ன அரிச்சாலை களப்பு எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கல்பிட்டி விஜய கடற்படைத் தளம் தெரிவித்துள்ளது.