கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சைக்கிள் ஓட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் புர்லின்டன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சைக்கிளில் சென்ற ஒருவரை வொக்ஸ்வோகன் ரக வாகனம் ஒன்று மோதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த சைக்கிளோட்டி உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாகன விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்க உதவுமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் வாகன விபத்து இடம் பெற்ற போது போதான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.