புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோவிட் தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
‘கமிட் டு குயிட் டுபக்கோ’ (Commit to Quit Tobacco) என்ற தலைப்பில் உலக சுகாதார அமைப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தின் வாயிலாக ஏராளனமான மக்கள் தங்களது வாழ்கையை மீட்டெடுத்து உள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:
புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட 50 சதவீத கூடுதல் வாய்ப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. கோவிட் தொற்று வராமல் தடுக்க புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை. இது தவிர இதய நோய்கள், புற்றுநோய், சுவாச நோய்கள் வருவதையும் புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் தவிர்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.