தமிழகத்தில் தவறுதலாக வங்கி கணக்கில் வந்த 2 லட்சம் ரூபாவை செலவு செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்தவர் 54 வயதான முருகேசன். காய்கறி வியாபாரியான இவர், ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் அவருக்கு இன்ப அதிர்ச்சியாக வங்கி கணக்கில் 2 லட்ச ரூபா வரவு வைக்கப்பட்டிருந்தது.
இந்த தொகையை திரும்ப வங்கி நிர்வாகம் கேட்கும் என நினைத்து சிறிது காலம் காத்திருந்தார். ஆனால் யாரும் பணத்தை திருப்பி கேட்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் அந்த பணத்தை எடுத்து தாராளமாக செலவு செய்தார்.
ஒரு கட்டத்தில் மொத்தமும் செலவானது. இது நடந்து முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் அதே வங்கியில் இருந்து அவரது வீட்டிற்கு வந்த மேனேஜர், மாற்றி வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் கலங்கி போய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
2 லட்சம் என்பது ஆகாத காரியம் என்று உணர்ந்த அவர், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.