கனடாவில் பெற்றோல் விலை அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காட்டுத்தீவு, பொருளதார நெருக்கடி நிலைமைகள் உளளிட்ட சில ஏதுக்களினால் இவ்வாறு எரிபொருள் விலை உயர்த்தப்படும் என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட வார இறுதி நாட்களில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப் பகுதியில் மக்கள் அதிகளவில் வீதிப் பயணங்களை மேற்கொள்வதனால் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதி நாட்களில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் வழமையானது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.