உக்ரைன் – ரஷ்யா போர் ஒரு ஆண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.
பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம். அந்த நகரின் ஒவ்வொரு வீடும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.