கனடாவின் இளைய தலைமுறையினர் அதிகளவில் ஈ-சிகரட் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதல் அளவில் ஈசிகரட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் கனடா முதனிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈ-சிகரட் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அண்மையில் இது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
7 முதல் 12ம் தரம் வரையில் பள்ளிக்கூடங்களில் கற்கும் 61096 மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 29 வீதமான சிறுவர் சிறுமியர் ஈ-சிகரட் பயன்பாடுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இளைய தலைமுறை ஈசிகரட் பயன்பாட்டில் கூடுதல் நாட்டம்
previous post