Home இலங்கை யாழ் பல்கலைக்கழகப் பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் கையாடல்

யாழ் பல்கலைக்கழகப் பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் கையாடல்

by Jey

யாழ்ப்பாண பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருட்கள் கையாடப்பட்ட விவகார விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கையாடப்பட்ட பொருள்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிக்கையிட்டிருந்தாலும், அது 20 இலட்சங்களைக் கடந்திருக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக எமது எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கையாடல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கெனப் பேரவையால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் விசாரணைகளில் பங்குபற்றாமல் வெளியேறியிருப்பதையடுத்து கையாடல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்குப் புதிதாக இரண்டு உறுப்பினர்களைப் பல்கலைக்கழகப் பேரவை நியமித்துள்ளது.

கையாடல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதியுடன் நேரடித் தொடர்பு இல்லாத உறுப்பினர்களைக் கொண்டு பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நேற்றுமுன்தினம் (20.05.2023) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

related posts