கொவிட் பெருந்தொற்று காரணமாக கனடாவில் புகைப் பிடித்தலில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வாட்டர்லூ பொதுச் சுகாதார பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் ஹம்மான்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்று மற்றும் புகைப்பிடித்தலினால் ஏற்படக்கூடிய பாதகம் குறித்த அரசாங்கத்தின் பிரச்சாரம் என்பனவற்றினால் நாட்டில் புகைபிடிப்பது குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இளையோர் புகைப்பிடிப்பது பெருமளவில் குறைந்துள்ளதாக பேராசிரியர் ஹம்மான்ட் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் வீட்டில் இருக்கும் போது அவர்களினால் புகைப்பிடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.