அல்பர்ட்டா மாகாணத்தில் மழை பெய்து வருவதனால் காட்டுத்தீ சம்பவங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்து வருவதாகவும் சற்று குளிர் உடனான காலநிலை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணம் முழுவதிலும் கடுமையான காட்டு தீ சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த மலைவீழ்ச்சியானது சிறிதளவு ஆறுதலை வழங்கியுள்ளது.
மாகாணத்தில் இந்த ஆண்டில் ஒன்பது லட்சத்து 45 ஆயிரம் டெக்ரேயர் காணி காட்டுத் தீயினால் அழிவடைந்துள்ளது.
மழை மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக காட்டுத்தீ பரவுதல் சற்றே கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத் தீ காரணமாக சுமார் 10,000 க்கு மேற்பட்ட அல்பர்ட்ரா பிரஜைகள் இடம் பெயர்ந்துள்ளனர்.