ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்து நானும், பிரதமர் அல்பானீசும் விவாதித்தோம்.
இன்றும் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினோம். இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளார்