கனடாவில் விமான நிலையங்களில் நெரிசல்களை குறைப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மத்திய போக்குவரத்து அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
விமான நிலையத்திற்குள் மேற்கொள்ளப்படும் சோதனையை நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கைகுரிய பயணி என்னும் விசேட ஓர் வகையீட்டின் அடிப்படையில் சில பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளையும் அதிதீவிர பரிசோதனைக்கு உட்படுத்தாது நம்பகமான பகுதி பயணிகள் தொடர்பில் சில தளர்வுகளை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த நம்பகமான பயணிகள் என்னும் வகையீடு எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
கனடாவின் முன்னணி விமான நிலையங்களில் காணப்படும் காலதாமத நிலைமைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.