கனடாவிற்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் மீண்டும் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது.
பெண்கள் உரிமை தொடர்பில் சவுதி அரேபியாவிற்கான கனடிய தூதுவர் வெளியிட்ட கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா கனடிய தூதுவரை நாடு கடத்தி இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு மீண்டும் தூதரகம் திறக்கப்பட உள்ளன.
தூதரகங்களை மீள திருப்து குறித்து பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விரைவில் முழு வீச்சில் இரு தரப்பு ராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட உள்ளது.