சிலியின் வடக்குக் கடற்கரையில் பரவிய பறவைக் காய்ச்சலால் கிட்டத்தட்ட 9,000 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் சிங்கங்கள், பென்குவின்கள், நீர்நாய்கள் போன்றவை அவற்றில் அடங்கும் என்று அந்தத் தென்னமெரிக்க நாட்டின் மீன்பிடிச் சேவைத்துறை தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு தொடங்கி 7,600க்கும் அதிகமான கடல் சிங்கங்கள் சிலியிலும் பெருவிலும் மட்டுமே இனவிருத்தி செய்யும்.
இந்நிலையில் அருகிவரும் ஹம்போல்ட் (Humboldt) பென்குவின்கள், டோல்பின்கள் முதலியவை கரையோரத்தில் மடிந்துகிடக்கக் காணப்பட்டன.
சிலியின் 16 வட்டாரங்களில் 12 இல் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. கரையோரத்தில் மடிந்துகிடக்கும் உயிரினங்களின் மூலம் கிருமி பரவுவதைத் தடுக்க, அவற்றைப் புதைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை பறவைக்காச்சலால் அர்ஜென்ட்டினா, பிரேசில், பராகுவே, பெரு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான கடல் சிங்கங்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.